“நீ கொடுக்கலேன்னா நாங்களே எடுத்துக்குவோம்”-சம்பளம் தர மறுத்த முதலாளியை ,கத்தியால் குத்தி வழிப்பறி செய்த தொழிலாளி.

“நீ கொடுக்கலேன்னா நாங்களே எடுத்துக்குவோம்”-சம்பளம் தர மறுத்த முதலாளியை ,கத்தியால் குத்தி வழிப்பறி செய்த தொழிலாளி.

டெல்லியில் திலக் நகரில் சம்பள தகராறில், வியாழக்கிழமை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர் .

“நீ கொடுக்கலேன்னா நாங்களே எடுத்துக்குவோம்”-சம்பளம் தர மறுத்த முதலாளியை ,கத்தியால் குத்தி வழிப்பறி செய்த தொழிலாளி.

சோனு என்பவர் தீரஜ் என்ற முதலாளியிடம் வேலை பார்த்து வந்துள்ளார் .இந்நிலையில் தீரஜ் கொரானா காரணமாக வியாபாரம் சரியாக இல்லாததால் சோனுவுக்கு சம்பளம் கொடுக்கவில்லை .இதனால் சோனு பலமுறை அவரிடம் சம்பளம் கேட்டு தகராறு செய்தும் அவர் தரவில்லை.
இதனால் சோனு இந்த விஷயத்தை தன்னுடைய நண்பர் குல்தீப்பிடம் கூறியுள்ளார் .அதனால் இருவரும் சேர்ந்து தீராஜிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர் .அந்த திட்டப்படி ,தீரஜ் தினசரி வசூல் தொகையை எடுத்துக்கொண்டு வரும்போது அவரை மடக்கி பணத்தை பறிக்க திட்டம் போட்டனர் .
கடந்த வியாழக்கிழமை தீரஜ் தன்னுடைய நண்பர் ரஞ்சனுடன் 50000 ரூபாய் வசூலான பணத்துடன் வரும்போது குல்தீப் அவரை வழி மறித்து கத்தியால் குத்தியுள்ளார் .இதை தடுக்க வந்த ரஞ்சனையும் கத்தியால் குத்தியுள்ளார் .அப்போது இருவரும் உயிருக்கு போராடும் நிலையில் அவர்களிடமிருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டனர் .பிறகு அங்குள்ளவர்கள் சேர்ந்து தீரஜ் மற்றும் ரஞ்சனை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அப்போது ரஞ்சன் வரும் வழியிலேயே இறந்ததாகவும் , தீரஜ் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினார் .
பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து ,அந்த பகுதியின் சிசிடிவி காமெராவை பரிசோதித்ததில் மூவரால் தீரஜ் தாக்கப்படுவதை கண்டறிந்து ,அதில் ஒரு சிறுவன் உள்பட மூவரை கைது செய்தனர் .முக்கிய குற்றவாளி குல்தீப் தலைமறைவாகிவிட்டார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர் .

“நீ கொடுக்கலேன்னா நாங்களே எடுத்துக்குவோம்”-சம்பளம் தர மறுத்த முதலாளியை ,கத்தியால் குத்தி வழிப்பறி செய்த தொழிலாளி.