சாக்க்ஷியால் வெளிச்சத்திற்கு வந்த தோனியின் அட்டகாசமான பைக் கலெக்ஷன்: வீடியோ உள்ளே! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainசாக்க்ஷியால் வெளிச்சத்திற்கு வந்த தோனியின் அட்டகாசமான பைக் கலெக்ஷன்: வீடியோ உள்ளே!

dhoni / top tamil news
dhoni / top tamil news

ராஞ்சி: தோனியின் பைக் கலெக்ஷன் குறித்து அவரது மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

கார்கள் மற்றும் பைக்குகள் மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இருக்கும் ஆர்வமும், மோகமும் பற்றி அவரது ரசிகர்கள் நன்கு அறிந்ததே. மேலும், தன்னிடம் இருக்கும் வாகனங்களை தோனியும் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அதனால் அவருக்கு வாகனங்கள் மீதுள்ள பற்று குறித்து புதியதாக தெரிந்து கொள்ள ஏதும் இல்லை.

 

 

ஆனால் தனது பண்ணை வீட்டில் தோனி ஒரு மிகப்பெரிய பைக் கலெக்ஷன் வைத்திருக்கிறார் என்பது நிறைய பேருக்கு தெரியாத ஒன்று. மிகவும் அரிதாக அந்த பைக் கலெக்ஷன் தொடர்பான புகைப்படங்கள் ஏதாவது ஒரு வகையில் லீக் ஆவது உண்டு. ஆனால் முதன்முறையாக தோனியின் மனைவி சாக்க்ஷியே  அந்த மாபெரும் பைக் கலெக்ஷன் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த தோனியின் ரசிகர்களும், பைக் காதலர்களும் வாயடைத்துப் போயுள்ளார்கள்.

dhoni / top tamil news

பைக்குகள் மட்டுமின்றி விலையுயர்ந்த கார்கள் மீதும் தோனிக்கு அதிக ஆர்வம் உண்டு. பெராரி, ஹம்மர் போன்ற ஆடம்பர கார்கள் அவரிடம் உள்ளன. ஆனால் ஒன்று மட்டும் உறுதி...தோனியின் பைக் கலெக்ஷனை பார்த்து பைக் பிரியர்கள் அனைவருக்கும் தூக்கம் கெடப் போகிறது!

2018 TopTamilNews. All rights reserved.