Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் "இந்த கிழங்கில் இவ்ளோ இம்மியூனிட்டி பவரா ?"என வியக்கவைத்து நுரையீரலை காக்கும் கிழங்கு

“இந்த கிழங்கில் இவ்ளோ இம்மியூனிட்டி பவரா ?”என வியக்கவைத்து நுரையீரலை காக்கும் கிழங்கு

"இந்த கிழங்கில் இவ்ளோ இம்மியூனிட்டி பவரா ?"என வியக்கவைத்து நுரையீரலை காக்கும் கிழங்கு

கிழங்கு வகைகளில் மிகவும் அதேசமயம் அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று என்றால் அது சர்க்கரை வள்ளி கிழங்குதான். இதனை நாம் அதிகம் பார்த்திருந்தாலும் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கமாட்டோம். நாம் எந்த உணவையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கிறோமோ அவையெல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும் அதற்கு சிறந்த உதாரணம் சர்க்கரை வள்ளி கிழங்குதான்.

சுவையுடன், சத்துகளும் நிறைந்ததாக உள்ளது, சர்க்கரைவள்ளிக் கிழங்கு. ஆனால் இதைச் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால், உடம்பு எடை அதிகரிக்கும் என்ற தவறான நம்பிக்கை பலருக்கும் உள்ளது.

வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அது மட்டுமின்றி இது எலும்பை வலிமைப்படுத்துதல், செரிமானம், இரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறது. அதுமட்டுமின்றி காயங்களை விரைவில் குணமாக்குவது சருமத்தின் நெகிழ்வு தன்மையை தக்கவைப்பது என பலவற்றிற்கும் வைட்டமின் சி அவசியம். அதுமட்டுமின்றி புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களையும் இது சரிசெய்யக்கூடும். சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி மற்ற பொருள்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.

இதன் பேரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர இது எந்த விதத்திலும் சர்க்கரை னாய் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இயற்கையாகவே இதிலுள்ள சர்க்கரை மிகவும் மெதுவாகவே இரத்தத்தில் கரையும். இதனால் இதனை கரைப்பது மிகவும் எளிது. அதுமட்டுமின்றி சோர்வு மற்றும் எடை அதிகரிப்பிற்கு இதனை பயன்படுத்தலாம்.

இரும்புசத்து

உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச் சத்துகள் அதிகமாக உள்ளதால், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அதிக வைட்டமின்களை கொண்டுள்ளதால், இளமையில் ஏற்படும் முதுமை தோற்றத்தைத் தடுக்கிறது. சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

இதில் இரும்பும், மாங்கனீஸும் அதிக அளவில் உள்ளன. நரம்புகள், இதயம், ரத்த நாளம் ஆகியவை சீராகச் செயல்பட இவை உதவுகின்றன. மாங்கனீஸ், மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் மிக முக்கிய தாதுப்பொருளாகும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால் இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம், அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம்.

மற்ற கிழங்குகளை போல அல்லாமல் இதனை பல வழிகளில் சமைக்கலாம். ஏன் பச்சையாக கூட சாப்பிடலாம்.ஆனால் சிலருக்கு இதனை பச்சையாக சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தலாம். எனவே இதனை வேகவைத்தோ, பொரியல் செய்தோ, சிப்ஸ் செய்தோ சாப்பிடலாம். சிலர் இதனை வைத்து பாயாசம் செய்தும் சாப்பிடுவார்கள்.

"இந்த கிழங்கில் இவ்ளோ இம்மியூனிட்டி பவரா ?"என வியக்கவைத்து நுரையீரலை காக்கும் கிழங்கு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சிக்கினார் அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது 55% அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்...

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியதில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த தோழி வள்ளிசெட்டி பவணி சம்பவ இடத்திலேயே...

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்: பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் என்ஜினியர்கள்!

நாடெங்கிலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு பலர் தங்களது வேலையை இழந்து உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கிடைத்த வேலைக்கு...

இடஒதுக்கீடு உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் ராமதாஸ் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம்...
- Advertisment -
TopTamilNews