கொரோனாவால் பாதிப்பு… ரூ.1,226 கோடி நஷ்டத்தை சந்தித்த செயில் நிறுவனம்..

கொரோனாவால் பாதிப்பு… ரூ.1,226 கோடி நஷ்டத்தை சந்தித்த செயில் நிறுவனம்..

2020 ஜூன் காலாண்டில் செயில் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.1,226.47 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.

உருக்கு துறையை சேர்ந்த ஸ்டீல் அதார்ட்டி ஆப் இந்தியா நிறுவனம் (செயில்) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் செயில் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.1,226.47 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.102.68 கோடி ஈட்டியிருந்தது.

கொரோனாவால் பாதிப்பு… ரூ.1,226 கோடி நஷ்டத்தை சந்தித்த செயில் நிறுவனம்..
செயில்

செயில் நிறுவனம் நிறுவனத்தின் நிதி நிலை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொற்றுநோய் பரவல் மற்றும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் குறிப்பிடத்தக்க இடையூறு மற்றும் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் அந்த காலாண்டில் குறைக்கப்பட வேண்டியிருந்தது.

கொரோனாவால் பாதிப்பு… ரூ.1,226 கோடி நஷ்டத்தை சந்தித்த செயில் நிறுவனம்..
செயில் ஆலை

இருப்பினும் அந்த காலாண்டின் இறுதி பகுதியில் குறைந்த அளவிலான பணியாளர்கள் கிடைப்பு மற்றும் சீர்குலைந்த விநியோக சங்கிலியுடன் மீண்டும் செயல்பாடுகள் தொடங்கின. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது விற்பனை அளவையும், வருவாயையும் கடுமையாக பாதித்தன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.