அன்றே சொன்னது toptamilnews: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

 

அன்றே சொன்னது toptamilnews: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்துவார்கள். வெற்றி பெற்ற வேட்பாளரை மாலை அணி வித்து தோளில் சுமந்து ஊர்வலமாக செல்வார்கள். இந்த கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.

அன்றே சொன்னது toptamilnews: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

தேர்தல் பிரச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால்தால், சமூக இடைவெளி காற்றில் பறந்து, இந்த அளவுக்கு கொரோனா 2வது அலை தீவிரமாகியிருக்கிறது. அதனால், தேர்தலில் முறையாக கொரோனா நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் பின் பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், வாக்கு எண்ணிக்கை அன்றைக்காவது கொரோனா நடவடிக்கைகளை தீவிரமாக ஆணையம் கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டியது வரும் என்று எச்சரித்த நீதிமன்றம், நடந்த சம்பவத்திற்காக தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று நீதிமன்றம் கடுமை காட்டியிருந்தது.

இதன்பின்னர், வாக்கு எண்ணிக்கையில் பங்கு பெறுவோர் தீவிர கொரோனா நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது.

மேலும், மே-2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளுக்கு பின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்திருக்கிறது தேர்தல் ஆணையம். கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அதிரடியாக தடை விதித்திருக்கிறது ஆணையம்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலையின் தீவிரம் ஆரம்பித்த நேரத்திலேயே, ஊரடங்கு தேவையில்லை என்று அப்போது ஆட்சியாளர்கள் சொன்னபோதும் கூட, எலெக்சனுக்கு பின்னர் ஊரடங்கு வரும் என்றும், ரிசல்ட் வந்ததும் பட்டாசு வெடிக்க முடியாது என்று டாப் தமிழ் நியூஸ் இணையம் கடந்த 23.3.2021 அன்றே சொன்னது.