நினைத்ததை நிறைவேற்றும் சாயிபாபா வியாழக்கிழமை விரதம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainநினைத்ததை நிறைவேற்றும் சாயிபாபா வியாழக்கிழமை விரதம்

சாயிபாபா
சாயிபாபா

இந்த யுகத்தின் இணையற்ற தெய்வமாகவே சாய்பாபாவை பக்தர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஒரு குழந்தையின் தேவையறிந்து செய்கிற தாயின் கருணைக்கு நிகராக தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறையை தீர்த்து வைப்பார் சாய்பாபாவின் என்பது ஆன்மிக அன்பர்களின் கருத்து . நமது பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், முழு பக்தியுடன் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சாய்பாபாவை வழிபட்டு வந்தால், சாய்பாபாவின் அன்பைப் பெறலாம். உரிய முறையில் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து பாபாவைத் துதித்தால் நினைத்து நடக்கும். ஆபத்திலிருந்து நம்மை சாய்பாபா காத்தருள்வார்.

saibaba

வியாழக்கிழமை விரதத்தின் மகிமையைப் பார்க்கலாம். சாய்பாபாவிடம் வேண்டுதல் வைத்து, தொடர்ந்து 9 வியாழக்கிழமைகள் விரதம் இருந்து மனசு சுத்தத்துடன் பாபாவைத் தரிசித்து வாருங்கள். இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். வியாழக்கிழமையின் மகிமையே, ஜாதி, மத , பேதமின்றி எல்லா சார்பினரும் வழிபடுவது தான். ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இஷ்ட சுத்தியோடு பக்தர்கள் சாய்பாபாவை நோக்கி தவமிருக்கிறார்கள். அவர்களது பிரச்சனைகள் எல்லாம் பனித்துளியைப் போல் கரைந்தோடுகிறது. தொடர்ந்து 9 வாரங்கள் விரதமிருந்து வந்தால் நிச்சயமாக உங்களது நம்பிக்கையை பாபா நிறைவேற்றித் தருவார். சாய் பக்தர்கள், அவரிடம் பயம் கொள்வதில்லை. அன்பால் மட்டுமே அவருடன் கட்டுண்டு இருக்கிறார்கள். நீங்கள் அதிகமாக பணம் செலவு செய்து ஆடம்பரமாக விழா எடுக்க வேண்டும் என்றெல்லாம் பாபா விரும்புவதில்லை. உங்களது பரிசுத்தமான அன்பால் மட்டுமே அவரை வெல்ல முடியும்.

saibaba

 பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று முடிவெடுத்து விட்ட பிறகு, நாள் கிழமை எல்லாம் பார்க்க வேண்டியதில்லை. உங்களது எண்ணம் மட்டுமே முக்கியமானது. இப்பொழுதே நீங்கள் உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான முதல் அடியை எடுத்து வைத்து விட்டீர்கள். பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் விரதத்தைத் தொடங்கி, முழு நம்பிக்கையோடு வழிபட்டு வாருங்கள். 
ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் சாய் நாமத்தை எண்ணி விரதத்தை ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அந்த காரியத்தை, தூய மனதில் சாய்பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். காலை அல்லது மாலையில் சாய்பாபாவின் புகைப்படத்திற்கு வீட்டிலிருந்தப்படியே பூஜைகள் செய்யலாம்.  ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாய்பாபா போட்டோ அல்லது சிலையை வைத்து தூய நீரால் துணியால் துடைத்து சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இடவேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும்,தீபமும் ஏற்றி சாய் விரத கதையைப் படிக்கவும். சாய்பாபாவை மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். 
பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் உங்களால் என்ன முடியுமோ அதை நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை பிறருக்கு விநியோகிக்க வேண்டும். சாயி நாதர் ஆடம்பரத்தை விரும்புவதில்லை. அன்பை மட்டுமே எதிர்பார்ப்பதால் நீங்களும் அன்போடு உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பாபாவின் திருப்தி உங்களது அன்பில் தான் இருக்கிறது. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய இயலாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்ளலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யக்கூடாது.

saibaba

பாபாவுக்கு பட்டினியாக கிடந்தால் பிடிக்காது. ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவேண்டும். முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவேண்டும். வெளியூர், வெளிநாடு எங்கு சென்றாலும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைப் பிடிக்கலாம். விரதமிருக்கும் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களினாலோ விரதம் இருக்கமுடியவில்லை என்றாலோ அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த வியாழக்கிழமையிலும் தொடரலாம்.விரதமிருக்கும் தினங்களில் குறைந்தது 5 பேருக்காவது இயன்ற அளவு அன்னதானம் செய்வது விரைவான காரிய சித்திக்கு வழி வகுக்கும். நம்பிக்கையோடு வணங்குபவர்களை பாபா ஒரு போதும் கைவிடுவதில்லை.ஒன்பது வார பிரார்த்தனை முடிவில் சாயி விரத பலன் அடங்கிய புத்தகத்தை குறைந்தது ஒன்பது பேருக்காவது  தரவேண்டும். வாங்குபவர்களுக்கும் சாயி சகாயம் அளிப்பார் என்பது நம்பிக்கை

2018 TopTamilNews. All rights reserved.