Home ஆன்மிகம் நம்பிக்கை வைப்பவர்களுக்கு நற்பாதை காட்டும் சாய்பாபா !

நம்பிக்கை வைப்பவர்களுக்கு நற்பாதை காட்டும் சாய்பாபா !

என்னை நம்பி வருபவர்களை ஒரு போதும் கைவிட மாட்டேன்! உன்னுடைய நிழலே நான் தான். உன்னுடைய அசைவுகளை வைத்தே உன்னை அறிந்து கொள்பவன் நான். உன்னுடைய பிரச்னை என்ன? உன்னுடைய கவலை என்ன? என்பது எனக்கு நன்கு தெரியும். எதைப்பற்றியும் கலங்காதே! உன்னுடைய வெற்றிக்கு வழி அமைப்பவன் நான். என் மீது நம்பிக்கை வைத்தவர்களை கைவிட்டதாக இதுவரை எவரும் சொல்லியதில்லை. உன்னை மட்டும் விட்டுவிடுவேனா என்ன.. ஓம் ஸ்ரீ சாய்ராம்.

பக்தர்கள் வைக்கும் நம்பிக்கை, நேர்மையான பக்தி ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவரையே நம்பியுள்ள பக்தர்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை உயர்த்துகிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்திகளை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மையான பக்தியுடன் யார் சாய்பாபாவை நோக்கி பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் பேசுகிறார். பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். மகாலெட்சுமியின் அம்சமான காமதேனுவை வேண்டினால் நாம் விரும்பிய பொருட்களை கொடுக்கும். காமதேனுவை விட சிறந்தவர் சாயி.

Sai Baba Shirdi

அவரை நம்பினால், நம்மால் சிந்தனை செய்து பார்க்க முடியாத பதவியையும், பொருளையும் அள்ளித் தருபவர். சாய்பாபா கூறியிருக்கிறார், ‘நீ உன் கர்மத்தின் பலனை அனுபவித்தாக வேண்டும். ஆனால், உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால், என் ஸாந்நியத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உன் கர்ம வினைகள் எரிக்கப்படும்’ அதாவது நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையே பிரதானம். வியாபார மையமாகிவிட்ட இந்த உலகத்தில், உங்கள் பிரச்னைகளை களைய, வேலை கிடைக்க, குழந்தை பாக்கியம் பெற என சாய்பாபா யந்திரம், எலுமிச்சை பழம், சாய்பாபா பூஜை பொருட்கள் என ஏமாற்று வேலை நடப்பதை நிறைய கேள்விப்பட்டிருக்கலாம். பார்த்திருக்கலாம். சாய்பாபா கோயில்களில் யந்திரம், பரிகாரம் என எதுவுமில்லை. அது ஒரு ஏமாற்று வேலை. பாபா பக்தர்களிடம் தன்னை மட்டுமே நம்பும்படி கூறியுள்ளார். பாபா எப்பொழுதும் உங்கள் உடனே இருக்கிறார். அதை மட்டும் நம்புங்கள். தொடர்ந்து இதையே நினைத்துக்கொள்ளுங்கள். நடப்பவற்றை எல்லாம் பாபா பார்த்துக்கொள்வார். ஓம் ஸ்ரீ சாய் ராம்!

Most Popular

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார்.. வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார் என வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில தினங்களுக்கு...

உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை?.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி..

மாநிலங்களவையில், உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்களை பா.ஜ.க. எம்.பி. கேள்வியால் தாக்கினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை...

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனத்தின் லாபம் ரூ.17 கோடியாக சரிவு

2020 ஜூன் காலாண்டில் ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.17.22 கோடி ஈட்டியுள்ளது. ஸ்டெர்லிங் அண்டு வில்சன்...

இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ், இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். கொரோனா வைரஸால்...
Do NOT follow this link or you will be banned from the site!