லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்!

 

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்!

அன்பு, அழகு, ஆன்மிகம், அறிவியல்,பக்தி என பஞ்ச பரிமாணத்தின் குறியீடாக விளங்கும் குங்குமம், நெற்றிப் பொட்டில், எந்த பொட்டு வடிவத்தில் இருந்தாலும், உலக நாகரிகத்திற்கு இந்திய கலாசாரத்தை, ஒளிவு மறைவின்றி நேருக்கு நேராய் அடையாளப்படுத்தும் நிலைக்கண்ணாடி.

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்!

மங்கலத்தின் அடையாளமாக விளங்கும் குங்குமத்தை சுமங்கலி பெண்கள், கிழக்கு நோக்கி நின்று கொண்டு ஸ்ரீம் ஸ்ரீயை நம; ஸம் சுபம் பூயாத், எனும் லட்சுமி மந்திரத்தை கூறி, தன்னுடைய புருவ மத்தியில் குங்குமத்தை வைக்க வேண்டும்.

திருமண பந்தத்தின் அடையாளமாக பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி, பெண்களின் தலை வகிட்டு பகுதியான சீமந்தபிரதேசம் ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும். மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது. பெண்களின் வாழ்க்கையில் நிறந்த லட்சுமி கடாட்சம் உண்டாகி, திருஷ்டி தோஷம் நீங்கும்.

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்!

தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். வீட்டிற்கு வரும் சுமங்கலி களுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர், பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும். ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில், குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். மங்கலகரமான குங்குமத்தை இட்டு மகாலட்சுமியின் அருளை பெறுவோம்.

-வித்யா ராஜா