மிஸ்ட் கால் போதும்..அதை ‘அரசியல் கட்சிகள்’ கவனிக்கும் : சத்குரு சொன்ன தகவல்!

மிஸ்ட் கால் போதும்..அதை ‘அரசியல் கட்சிகள்’ கவனிக்கும் : சத்குரு சொன்ன தகவல்!

தமிழகத்தில் பூஜை, புனஸ்காரங்கள் ஏதும் செய்யாமல் ஆயிரக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அதை பக்தர்களிடம் கொடுத்தால், பொன் போல் வைத்துப் போற்றுவார்கள் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். இதை தேர்தல் அறிக்கையில் ஒன்றாக்குங்கள் என மு.க ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு கூட கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நடிகர் சந்தானம் வரவேற்பு அளித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

மிஸ்ட் கால் போதும்..அதை ‘அரசியல் கட்சிகள்’ கவனிக்கும் : சத்குரு சொன்ன தகவல்!

இந்த நிலையில், #கோவில்அடிமைநிறுத்து என்ற இயக்கத்தின் கலந்துரையாடல் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் சந்தானம், சத்குருவுடன் உரையாடினார். அப்போது உங்களை ஆதரித்த என்னை சங்கி என்றழைக்கிறார்கள் என சந்தானம் சத்குருவிடம் கூறினார். இதற்கு பதிலளித்த சத்குரு, காடுகளை ஆக்கிரமித்து ஈஷா யோகா மையம் கட்டப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அது என்னுடைய சொந்த இடம். ஒரு இன்ச் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதை நிரூபித்து விட்டால் நாட்டை விட்டே சென்று விடுவேன் என ஆவேசமாக பேசினார்.

மிஸ்ட் கால் போதும்..அதை ‘அரசியல் கட்சிகள்’ கவனிக்கும் : சத்குரு சொன்ன தகவல்!

இதையடுத்து கோவில்களை பாதுகாப்பது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்குரு, கோவில்களை நிர்வகிக்க முறையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். சாதி மதம் பாராமல் அவை இருக்க வேண்டும். அரசு இதை கவனத்தில் கொண்டு பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

மிஸ்ட் கால் போதும்..அதை ‘அரசியல் கட்சிகள்’ கவனிக்கும் : சத்குரு சொன்ன தகவல்!

மேலும் மிஸ்டு கால் இயக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு வழி தான். 7 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் ஒரு சில கோடி மக்கள் மிஸ்டு கால் கொடுத்தாலே அரசியல் கட்சிகள் அதை கவனிக்கும் என விளக்கம் அளித்தார்.