முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசை பாராட்டிய சத்குரு!

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசை பாராட்டிய சத்குரு!

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் பூஜைகள் ஏதுமின்றி பாழடைந்து கிடைப்பதாக வேதனை தெரிவித்திருந்த ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை பொதுமக்களிடம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆன்மிகத்துக்கும் கலாச்சாரத்துக்கும் மையப் புள்ளியாய் விளங்கும் கோவில்கள் விடுவிக்கப்பட்டு பக்தர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசை பாராட்டிய சத்குரு!

இதற்காக #freetntemple என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறார். சத்குருவின் இந்த ஆலோசனைக்கு ஆதரவு தெரிவித்து பெருகியது. அவரது கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செவி சாய்த்துள்ளது. நேற்று இந்த சமநிலையை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள், இணைய பதிவேற்றம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவை ரிட்வீட் செய்திருக்கும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, அரசுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் – சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவை டேக் செய்துள்ளார்.