” வேலையிலிருந்து நீக்கினேன் ,பாலியல் புகாரில் சிக்கினேன்”-பெண் ஊழியர் மீது மோசடி புகார் கூறும் அதிகாரி ..

மைய அரசின் தேசிய ஆயுஷ் மிஷனின் இயக்குனர் மீது நேற்று ஒரு பெண் பாலியல் புகார் கூறியதற்கு, பதிலுக்கு அந்த அதிகாரி அந்த பெண் மீது மோசடி புகார் கூறியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது .


ஒடிஷா மாநிலத்தில் புவனேஷ்வரில் உள்ள தேசிய ஆயுஷ் மிஷனின் இயக்குனர் சாரங்கி மீது அங்கு பணிபுரியும் 25 வயது பெண் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சாரங்கி, தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார் .ஆனால் சாரங்கி அதை மறுத்து, அந்த பெண் மோசடி செய்து வேலைக்கு சேர்ந்ததை நான் கண்டறிந்து வேலைநீக்கம் செய்ய இருந்ததால் இப்படி புகார் கூறுவதாக மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார் .
அவர் மேலும் கூறுகையில் அவர் PMU தலைவரின் நெருங்கிய கூட்டாளி என்றும், அவரின் செல்வாக்கில் தமக்கு முன்னாடியே அவர் இங்கு வேலைக்கு சேர்ந்து விட்டதாகவும் ,அவரோடு சேர்ந்து கொண்டு இருவரும் பல போலி ஆவணங்கள் தயார் செய்து அவர் இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.இதை தாம் கண்டுபிடித்து இருவரையும் வேலை நீக்கம் செய்ய இருந்தேன் .அதனால் கடுப்பான அவர் அந்த பெண்ணை தூண்டிவிட்டு இப்படி என் மீது பாலியல் புகாரை அபாண்டமாக சுமத்தியுள்ளதாக அவர் கூறினார் .

fraud
அதனால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவை போலியாக ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி எதிர் புகார் அளித்தார். இது பற்றி போலீசாரும் ,உயர் அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...