சரத் பவாரை சமாதானம் செய்ய அனில் தேஷ்முக் ரூ.2 கோடி கேட்டார்.. சச்சின் வாசே வாக்குமூலம்..

 

சரத் பவாரை சமாதானம் செய்ய அனில் தேஷ்முக் ரூ.2 கோடி கேட்டார்.. சச்சின் வாசே வாக்குமூலம்..

என்னை மீண்டும் அமர்த்துவது தொடர்பாக சரத் பவாரை சமாதானம் செய்ய அனில் தேஷ்முக் என்னிடம் ரூ.2 கோடி கேட்டார் என தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் சச்சின் வாசே தெரிவித்து இருப்பது மகாராஷ்டிரா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் அண்மையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இ மெயில் வாயிலாக அனுப்பிய கடிதத்தில், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூல் செய்து தன்னிடம் (தேஷ்முக்) கொடுக்கும்படி கூறினார் என்று அதில் குறிப்பி்ட்டு இருந்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சரத் பவாரை சமாதானம் செய்ய அனில் தேஷ்முக் ரூ.2 கோடி கேட்டார்.. சச்சின் வாசே வாக்குமூலம்..
தேசிய புலனாய்வு அமைப்பு

இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பின் காவலில் இருக்கும் சச்சின் வாசே, அவர் கையால் எழுதிய ஒரு கடிதத்தை தேசிய புலானய்வு அமைப்பு நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் மகாராஷ்டிராவின் பல அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். சச்சின் வாசே அந்த கடிதத்தில், நான் மீண்டும் பணியமர்த்தப்பட்ட உடனே மீண்டும் பணியிலிருந்து நீக்க சில முயற்சிகள் நடந்தன. என்னை மீண்டும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய சரத்பவார் உத்தரவிட்டுள்ளதாக நாக்பூரிலிருந்து அனில் தேஷ்முக் என்னிடம் தொலைபேசியில் பேசினார். மேலும் சரத் பவாரை சமாதானம் செய்ய ரூ.2 கோடி தரும்படி அனில் தேஷ்முக் கேட்டார்.

சரத் பவாரை சமாதானம் செய்ய அனில் தேஷ்முக் ரூ.2 கோடி கேட்டார்.. சச்சின் வாசே வாக்குமூலம்..
அனில் தேஷ்முக்

ஆனால் என்னால் எவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடியாது என்று அனில் தேஷ்முக்கிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் பிறகு தரும்படி என்னிடம் கூறினார். கடந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு நெருக்கமான ஒரு நபர் என்னிடம் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்பவர்களிடமிருந்து மாதம் ரூ.100 கோடி வசூல் செய்து தரும்படி கேட்டார். ஆனால் நான் அதற்கு மறுத்தபோது, மீண்டும் உன் வேலையை இழப்பாய் என அந்த நபர் தெரிவித்தார். ஒரு மோசடி தொடர்பான விசாரணையை முடிக்க மகாராஷ்டிரா அமைச்சரும், சிவ சேனா தலைவருமான அனில் பராப் என்னிடம் ரூ.50 கோடி கேட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். சச்சின் வாசேவின் குற்றச்சாட்டுகளால் மகாராஷ்டிரா அரசு சிக்கலில் மாட்டியுள்ளது.