பிறந்தநாளில் ‘நச்’னு மெசெஜ் சொன்ன சச்சின்… அனைவரும் ஃபாலோ செய்ய வேண்டிய விஷயம்!

 

பிறந்தநாளில் ‘நச்’னு மெசெஜ் சொன்ன சச்சின்… அனைவரும் ஃபாலோ செய்ய வேண்டிய விஷயம்!

கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியா மிக மோசமான சூழலில் சிக்கியிருக்கிறது. அதிகரிக்கும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. ஆக்சிஜன் பிரச்சினை பெரிய பிரச்சினையாக தலைவிரித்தாடுகிறது. இந்த 2ஆம் அலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பாதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் லேசான அறிகுறிகள் இருந்ததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

பிறந்தநாளில் ‘நச்’னு மெசெஜ் சொன்ன சச்சின்… அனைவரும் ஃபாலோ செய்ய வேண்டிய விஷயம்!

ஒரு வாரம் சென்ற பிரகு தொற்றின் தீவிரம் அதிகரித்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அங்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். சச்சினுக்கு இன்று 48ஆவது பிறந்தநாள். அவருக்கு ரசிகர்களும் கிரிக்கெட் உலகினரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். இச்சூழலில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு மெசெஜ் சொல்லியிருக்கிறார்.

பிறந்தநாளில் 'நச்'னு மெசெஜ் சொன்ன சச்சின்… அனைவரும் ஃபாலோ செய்ய வேண்டிய விஷயம்!

அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “என் பிறந்தநாளிற்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிறந்தநாளில் உங்களுக்கு ஒரு மெசெஜ் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். கடந்த வருடம் நான் பிளாஸ்மா தானம் செய்யும் மையத்தைத் திறந்து வைத்தேன்.


அப்போது சரியான நேரத்தில் பிளாஸ்மா தானம் வழங்கினால் கொரோனா நோயாளிகளை விரைவாக குணமடைய செய்யலாம் என அங்கு சொல்லப்பட்டது. நான் பிளாஸ்மா தானம் செய்ய போகிறேன். அதேபோல யாரெல்லாம் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளீர்களோ அவர்கள் அனைவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி பிளாஸ்மா தானம் செய்யுங்கள். ரத்த தானம் செய்யுங்கள்” என்றார்.