’கேப்டனுக்கு தோனியைப் பரிந்துரைக்க இதுவே காரணம்’ சச்சின் ஓப்பன் டாக்

’கேப்டனுக்கு தோனியைப் பரிந்துரைக்க இதுவே காரணம்’ சச்சின் ஓப்பன் டாக்

இந்திய கிரிக்கெட்டில் பொன் எழுத்துகளால் தன் எழுத்தைப் பொறித்துவிட்டு சென்றவர் மஹேந்திர சிங் தோனி.

விக்கெட் கீப்பராக இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்தவர் தோனி. அதிரடி பேட்ஸ்மேனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். இவர் ஆடியபோது சச்சின் டெண்டுல்கர், சவுரங் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகிய மூன்று பெரும் நட்சத்திரங்களும் அணியில் இருந்தனர்.

’கேப்டனுக்கு தோனியைப் பரிந்துரைக்க இதுவே காரணம்’ சச்சின் ஓப்பன் டாக்

அத்தனை பேரையும் கடந்து மஹேந்திர சிங் தோனி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

தோனியைக் கேப்டனாக தான் பரிந்துரைத்தாகவும் அதற்கான காரணத்தையும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

’கேப்டனுக்கு தோனியைப் பரிந்துரைக்க இதுவே காரணம்’ சச்சின் ஓப்பன் டாக்
 (Photo by Satish Bate/Hindustan Times via Getty Images)

“நாங்கள் விளையாடும்போது ஸ்லிப் பீல்டு செட் பண்ண தோனியிடம் ஆலோசனை கேட்பேன். அப்போது அவர் கூறும் தகவல்கள் மூலம் தோனி கிரிக்கெட்டை நன்கு புரிந்திருக்கிறார் என்பது ஆட்டத்தைப் பற்றி துல்லியமாகக் கணிக்கிறார் என்பது தெரிந்தது. அதனால் அவரை கேப்டனுக்குப் பரிந்துரைத்தேன்’ என்று கூறியிருக்கிறார்.

சச்சின் பரிந்துரைத்தது தவறு இல்லை என்பது தன் சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்.

’கேப்டனுக்கு தோனியைப் பரிந்துரைக்க இதுவே காரணம்’ சச்சின் ஓப்பன் டாக்

28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது தோனியின் கேப்டன் ஷிப்

டி20 முதல் உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும் மஹேந்திர சிங் தோனிதான்.