“தோனி இப்ப ஃபார்ம்லே இல்ல ,ரிட்டையர் ஆனதுல தப்பே இல்ல”-தோனி ஓய்வு பற்றி சச்சின் கருத்து .

“தோனி இப்ப ஃபார்ம்லே இல்ல ,ரிட்டையர் ஆனதுல தப்பே இல்ல”-தோனி ஓய்வு பற்றி சச்சின் கருத்து .

கிரிக்கெட் வீரர், கூல் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15ம் தேதி தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் .இதற்கு அவர் இன்னும் விளையாட வேண்டுமென்றும் ,அவசரப்பட்டுவிட்டார் என்றும் பலர் கருத்து கூறிய நிலையில் ,அவரோடு பல வருடம் சர்வதேச போட்டியில் விளையாடி, இப்போது ஓய்வு பெற்ற சச்சின்டென்டுல்கர் அவரை பற்றி சில மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் .

“தோனி இப்ப ஃபார்ம்லே இல்ல ,ரிட்டையர் ஆனதுல தப்பே இல்ல”-தோனி ஓய்வு பற்றி சச்சின் கருத்து .
2005ம் ஆண்டு பைசலாபத்தில் பாகிஸ்தானோடு இந்தியா விளையாடிய போது ,பாகிஸ்தான் வேக பந்து வீச்சாளர் அக்தரின் பந்துகள் ஒவ்வொன்றையும் தோனி பவுண்டரிகளாகவும் ,சிக்சர்களாவும் மாற்றி மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திக்கொண்டிருந்தார் .அப்போது அக்தர் போட்ட ஒரு பௌன்சரை அழகாக விளையாடி ,அதை சிக்சருக்கு அவர் அனுப்பியதை என்னால் மறக்க முடியாது என்றும் ,அவர் அப்போது 158 பந்துகளில் 148 ரன்கள் குவித்து அக்தரை டென்ஷனாக்கினார் என்றும் குறிப்பிட்டார்
மேலும் அவர் கூறுகையில், டோனி 34 வயதில் ரிட்டையர் ஆகியிருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன் ,ஆனால் இப்போது 39 வயதில் அவர் பார்மில் இல்லை ,மேலும் முன்பு போல அவரால விளையாட முடியவில்லை அதனால் அவர் ரிட்டையர் ஆக இது சரியான நேரம் என்றும் குறிப்பிட்டார் .மேலும் அவர் 2011ல் உலக கோப்பையை நமக்கு பெற்று கொடுத்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக திகழ்ந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தோனி இப்ப ஃபார்ம்லே இல்ல ,ரிட்டையர் ஆனதுல தப்பே இல்ல”-தோனி ஓய்வு பற்றி சச்சின் கருத்து .