• April
    02
    Thursday

Main Area

Main



லாரியஸ் விருதை வென்ற சச்சின் - விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக 2011 இறுதிப் போட்டி தேர்வு

sachin
sachin

பெர்லின்: முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் லாரியஸ் விருதை வென்றுள்ளார்.

லாரியஸ் விருது விளையாட்டு துறையில் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2019-ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. இதில்  2019-ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலாஒன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதேபோல சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் சிமோன் பைல்ஸ் பெற்றார்.

ttn

மேலும் கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் வென்ற பிறகு சச்சினை இந்திய  வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. அதற்கான லாரியஸ் விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் இந்த விருதை சச்சினுக்கு வழங்கினார். உலக கோப்பையை வென்றபோது இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும், ஒட்டு மொத்த நாடும் அந்த தருணத்தை கொண்டாடியது எனவும் விருது பெற்ற பிறகு சச்சின் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.