உக்கிரமடைந்த கொரொனா தொற்று… அவசரமாக சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

 

உக்கிரமடைந்த கொரொனா தொற்று… அவசரமாக சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கிறது. தற்போது இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதால் அதன் தாக்கம் அதிவேகமாக இருக்கிறது. இச்சூழலில் கடந்த மார்ச் 27ஆம் தேதி கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்றியப்பட்டது. இந்தத் தகவலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் சச்சின். அதில், “நானே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்தேன். தற்போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. எனக்கு லேசான அறிகுறிகள் தென்படுகின்றன.

உக்கிரமடைந்த கொரொனா தொற்று… அவசரமாக சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. அதனால் வீட்டிலேயே நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். முறையான கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகள் வழங்கிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இச்சூழலில் அவருக்கு தொற்றின் வீரியம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். தற்போது அவர் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனையும் தற்போது அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறேன். இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உலகக்கோப்பையை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த தினத்தில் அனைத்து வீரர்களுக்கும் இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு இதே நாளில் தான் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. சச்சினுக்கு சிறந்த ஃபேர்வலாக அந்த இறுதிப்போட்டி அமைந்தது.