பெட்ரோல் விலை உயர்வு சாமானிய மக்களின் பாக்கெட் மீதான மத்திய அரசின் நேரடி தாக்குதல்.. சச்சின் பைலட்

பெட்ரோல் விலை உயர்வு சாமானிய மக்களின் பாக்கெட் மீதான மத்திய அரசின் நேரடி தாக்குதல்.. சச்சின் பைலட்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களின் பாக்கெட் மீதான மத்திய அரசின் நேரடி தாக்குதல் என்று சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வால் கடைசியில் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள்தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வு சாமானிய மக்களின் பாக்கெட் மீதான மத்திய அரசின் நேரடி தாக்குதல் என்று சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.

பெட்ரோல் விலை உயர்வு சாமானிய மக்களின் பாக்கெட் மீதான மத்திய அரசின் நேரடி தாக்குதல்.. சச்சின் பைலட்
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

ராஜஸ்தான் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அம்மாநில எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட், உத்தரகாண்ட் மாநிலம் தேஹ்ராதுனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நாட்டில் 250க்கும் மேற்பட்ட நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ (லிட்டருக்கு) தாண்டி விட்டது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பெட்ரோல் விலை 66 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு சாமானிய மக்களின் பாக்கெட் மீதான மத்திய அரசின் நேரடி தாக்குதல்.. சச்சின் பைலட்
வரி

மத்திய அரசின் சொந்த புள்ளிவிவரத்தின்படி, கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 250 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 800 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பாமர மக்களின் பைகள் மீதான மத்திய அரசின் நேரடித் தாக்குதல் தவிர வேறில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த மே, ஜூன் மற்றும் இந்த மாதத்தில் இதுவரையிலான கடந்த 77 நாட்களில் 30 நாட்கள் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது, 37 நாட்கள் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.