தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகருக்கு மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சச்சின் பைலட்

 

தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகருக்கு மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சச்சின் பைலட்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி. ஜோஷி இன்று 71வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதேசமயம் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்,ஏ.வுமான சச்சின் பைலட் மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகருக்கு மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சச்சின் பைலட்

சச்சின் பைலட் தனது டிவிட்டரில், ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் டாக்டர் சி.பி. ஜோஷிஜிக்கு இனிய பிறந்தநாள் மற்றும் நல்வாழ்த்துக்கள். உங்களது நல்ல ஆரோக்கியத்துக்கும், நீண்ட வாழ்வுக்கும் நான் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் என பதிவு செய்து இருந்தார். சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த அரசியல் களேபரத்துக்கு மத்தியிலும் சச்சின் பைலட் சபாநாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகருக்கு மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சச்சின் பைலட்

அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து சச்சின் பைலட்டை துணை முதல்வர் மற்றும் மாநில கட்சி தலைவர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கழட்டி விட்டது. மேலும், கொறடா வாயிலாக அம்மாநில சபாநாயகர் சி.பி. ஜோஷியிடம் அவர்களுக்கு எதிராக புகார் கொடுத்தது மற்றும் நடவடிக்கை எடுக்கும்படியும் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து சபாநாயகர் சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினார்.