சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்! – 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்

சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்! – 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியில் கலகம் விளைவித்து வரும் சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் இரண்டாவது முறையாக இன்று அவர்கள் தங்கியுள்ள சொகுசு ஹோட்டலில் கூடியது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்! – 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்

கூட்டத்தில் பங்கேற்க சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்து ஹரியானாவில் தங்கியுள்ள ஹோட்டலில் தனியாக கூட்டத்தை நடத்தினார்கள்.
ஜெய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 102 பேர் பங்கேற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்! – 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்

ஆட்சி அமைக்க 101 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் தற்போது 102 பேர் இருப்பதால் ஆட்சி தற்காலிகமாக தப்பியது என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ-க்கள் கட்சிக்கு எதிராக செயல்படும் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை கட்சியில் இருந்து நீக்க காங்கிரஸ் தலைமை முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சச்சின் பைலட்டை நீக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.