தேசியவாதம் என்பது டவுசர் அணிந்து போலி உரைகளை வழங்குவதில்லை.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கிய காங்கிரஸ்..

 

தேசியவாதம் என்பது டவுசர் அணிந்து போலி உரைகளை வழங்குவதில்லை.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கிய காங்கிரஸ்..

தேசியவாதம் என்பது விவசாயிகள் நலனை பற்றியது, நாக்பூரிலிருந்து டவுசர் அணிந்து போலி உரைகளை வழங்குவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை மறைமுகமாக சாடினார்.

ராஜஸ்தான் மாநில் ஜெய்பூரில் காங்கிரஸ் சார்பில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் பேசுகையில் கூறியதாவது: நீங்கள் விவசாயிகளின் நலம் குறித்து பேசியிருந்தால் அதுதான் உண்மையான தேசியவாதம். நாக்பூரிலிருந்து டவுசர் அணிந்து போலி உரைகளை வழங்குவதில்லை. லவ் ஜிஹாத் குறித்து பேசுவது, திருமணம் தொடர்பாக சட்டம் உருவாக்கும் அதேநேரத்தில் விவசாயிகளின் எதிர்காலத்தை இருட்டில் தள்ளுகிறீர்கள்.

தேசியவாதம் என்பது டவுசர் அணிந்து போலி உரைகளை வழங்குவதில்லை.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கிய காங்கிரஸ்..
சச்சின் பைலட்

இந்த நாட்டில் பெரும்பாலான விவசாய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதற்கு வரலாறு ஒரு சாட்சி. அனால் பா.ஜ.க.வை சேர்ந்த எந்தவொரு விவசாய தலைவரும் இல்லை, இருக்கவும் முடியாது. நாட்டின் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல் அவர்களும் அச்சப்படுகிறார்கள் என்பதில் நான் வருத்தப்படுகிறேன். அவர்கள் தங்களது எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அஞ்சுகிறார்கள். இது மத்திய அரசால் தீர்க்க முடியாது ஒரு சிக்கலான பிரச்சினை அல்ல. குறைந்தபட்ச ஆதரவு விலை விதிமுறைகளை நாங்கள் சேர்க்கிறோம், 3 சட்டங்களை திரும்ப பெறுகிறோம் என்று மட்டுமே நீங்கள் (மத்திய அரசு) சொல்ல வேண்டும். அவர்கள் சட்டங்களை திரும்ப பெற்றால் நாங்கள் நன்றி தெரிவிப்போம்.

தேசியவாதம் என்பது டவுசர் அணிந்து போலி உரைகளை வழங்குவதில்லை.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கிய காங்கிரஸ்..
மோகன் பகவத்

விவசாயிகளுடன் நிற்பது அரசியல் என்றால் நாங்கள் அதனை செய்வோம். நாங்கள் விவசாயிகளை ஆதரிப்போம். அதனை தொடர்ந்து செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், ஒருவர் இந்து என்றாலே அவருக்கு தேச பக்தி இருக்கும். இது இயற்கையானது. இதுவே இந்துக்களின் இயல்பான குணம். சில சிமயங்களில் இந்துக்களின் தேச பக்தியை தட்டி எழுப்ப வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் இந்துவாக இருப்பவர் ஒரு போதும் தேச விரோதியாக இருக்கமாட்டார் என்று தெரிவித்தார்.