மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசு வேலையில் 5 சதவீதம் இடஒதுக்கீடு… சச்சின் பைலட்

 

மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசு வேலையில் 5 சதவீதம் இடஒதுக்கீடு… சச்சின் பைலட்

ராஜஸ்தான் அரசின் பல வேலைகளில் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு (ஒ.பி.சி.) 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற விவகாரத்தில் உடனடியாக தலையீடுமாறு முதல்வருக்கு சச்சின் பைலட் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி சண்டையால் அண்மையில் ராஜஸ்தான் அரசியல் நிலவரம் மிகவும் பரபரப்பாக இருந்தது. தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையோடு போன கதையாக அசோக் கெலாட் அரசு தப்பியது. தற்போது அம்மாநில அரசின் பல வேலைகளில் மிகவும் தங்கிய பிரிவினருக்கு (ஒ.பி.சி.) 5 சதவீத இடஒதுக்கீடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசு வேலையில் 5 சதவீதம் இடஒதுக்கீடு… சச்சின் பைலட்
இடஒது்க்கீடு

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான சச்சின் பைலட், அரசு வேலைகளில் சிலவற்றில் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு (ஒ.பி.சி.) 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற புகார் உடனடியாக தலையீடுமாறு முதல்வர் அசோக் கெலாட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசு வேலையில் 5 சதவீதம் இடஒதுக்கீடு… சச்சின் பைலட்
முதல்வர் அசோக் கெலாட்

மாநிலத்தின் பல்வேறு மண்டலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். அப்போது மாநில அரசின் பல வேலைகளில் மிகவும் தங்கிய பிரிவினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என என்னிடம் தெரிவித்தனர். ஆகையால் இடஒதுக்கீடு விவகாரத்தில் உடனடியாக நீங்கள் தலையிட வேண்டும். 2018 சட்டப்பேரவை தேர்தலின்போது மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீட வாக்குறுதியையும் கொடுத்து இருந்தோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.