எந்த பதவியும் கேட்கவில்லை.. கட்சி தொண்டர்களின் மரியாதை குறித்த பிரச்சினையை எழுப்பினே்- சச்சின் பைலட்

 

எந்த பதவியும் கேட்கவில்லை.. கட்சி தொண்டர்களின் மரியாதை குறித்த பிரச்சினையை எழுப்பினே்- சச்சின் பைலட்

கடந்த சுமார் ஒரு மாத காலமாக ராஜஸ்தானில் அரசியல் பரபரப்பாக இருந்தற்கு காரணமாக இருந்த சச்சின் பைலட், நேற்று முன்தினம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசி சமாதானம் ஆனதால் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இருந்த நெருக்கடி தீர்ந்தது. சச்சின் பைலட் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கட்சி விரோத நோட்டீஸ் வழங்கப்பட்டத்தில் வருத்தத்தில் இருந்தேன், 25 நாட்கள் கழித்து அது திரும்ப பெறப்பட்டது.

எந்த பதவியும் கேட்கவில்லை.. கட்சி தொண்டர்களின் மரியாதை குறித்த பிரச்சினையை எழுப்பினே்- சச்சின் பைலட்

நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்றோம். பல வழக்குகள் பதிவாகின. இந்த நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். நான் என்னுடைய பிரச்சினைகளை எழுப்பினேன். பழிவாங்கும் அரசியல் இருக்கக்கூடாது. எந்தவொரு பதவிக்கும் நான் கோரவில்லை. கட்சி கொடுத்த பொறுப்புகளை நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன். நாங்கள் எங்களது கட்சி தலைமை, கட்சி, அதன் சித்தாந்தம் மற்றும் அரசு ஆகியவற்றுக்கு எதிராக எப்போதும் பேசவில்லை. நாங்கள் செயல்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பாக மட்டுமே எங்களது கருத்துக்களை எழுப்பினோம், இந்த பிரச்சினைகளை எழுப்ப எங்களுக்கு உரிமை உள்ளது என்று நினைக்கிறேன்.

எந்த பதவியும் கேட்கவில்லை.. கட்சி தொண்டர்களின் மரியாதை குறித்த பிரச்சினையை எழுப்பினே்- சச்சின் பைலட்

நாங்கள் தொடர்ந்து காங்கிரசில் இருப்போம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக உள்ளோம். உண்மை மற்றும் கொள்கைகள் அடிப்படையிலானது எனது அரசியல். இன்று கூட எந்தவொரு பதவிக்கும் பேராசை படவில்லை. பதவிகள் வரும் போகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், அசோக் கெலாட் அண்மையில் சச்சின் பைலட்டை எதற்கும் லாய்க்கற்றவர் என்று கூறியது குறித்து கேட்டதற்கு, நான் எனது குடும்பத்திலிருந்து சில மதிப்புகளை பெற்றுள்ளேன். நான் ஒருவரை எவ்வளவு எதிர்க்கிறேன் என்பது விஷயம் அல்ல, நான் ஒருபோதும் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அசோக் கெலாட் ஜி என்னை விட மூத்தவர், தனிப்பட்ட முறையில் நான் அவரை மதிக்கிறேன் ஆனால் பணி சார்ந்த பிரச்சினைகளை எழுப்ப எனக்கு உரிமை உள்ளது. நான் பதில் அளித்து இருந்தால் அது நன்றாக இருக்காது. பொது இடத்தில் பேசும்போது லட்சுமணன் கோடு இருக்க வேண்டும், கடந்த 20 ஆண்டுகளில் நான் அதை தாண்டியது இல்லை. அது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, உண்மை வெளியே வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சச்சின் பைலட் நேற்று ஜெய்ப்பூர் திரும்பியது குறிப்பிடத்தக்கது.