அரசு மற்றும் கட்சியில் யார் பணியாற்ற வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.. சச்சின் பைலட்

அரசு மற்றும் கட்சியில் யார் பணியாற்ற வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.. சச்சின் பைலட்

ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சச்சின் பைலட் நேற்று தனது தொகுதியான டோங்குக்கு கிளம்பி செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராஜஸ்தான் காங்கிரசில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என நான் நம்புகிறேன்.

அரசு மற்றும் கட்சியில் யார் பணியாற்ற வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.. சச்சின் பைலட்

3 பேர் கொண்ட குழுவை அமைத்து உடனடி நடவடிக்கை எடுத்தற்கு காங்கிரஸ் தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அந்த கமிட்டி தனது பணியை செய்யும், நாம் என்ன சொல்ல மற்றும் கேட்க வேண்டும், நாங்கள் அதனை செய்வோம், அவர்களின் செயல்திட்டத்தின்படி நடவடிக்கைகளை மேற்கொள்வோம். கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் பணிகள் நடைபெற வேண்டும்.

அரசு மற்றும் கட்சியில் யார் பணியாற்ற வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.. சச்சின் பைலட்

கட்சி தலைவர், பொது செயலாளர் பொறுப்பு மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்துவார்கள். அரசாங்கத்தில் யார் பணியாற்ற வேண்டும், கட்சியில் யார் பணியாற்ற வேண்டும் என்பதை கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும். அனைத்து கால கட்டத்திலும் மக்களிடமிருந்து நான் ஆதரவை பெறுகிறேன். கட்சி மாநிலத்தில் ஆட்சி செய்வதால், தொகுதி மக்களிடம் பணியை எப்படி திறம்பட மேற்கொள்ள முடியும் என்பது குறித்து விவாதிக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.