ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட்…. ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு தப்பியது

 

ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட்…. ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு தப்பியது

சச்சின் பைலட்டும் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தினந்தோறும் ஏதாவது அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் நேற்று சச்சின் பைலட் தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதனையடுத்து அசோக் கெலாட் அரசுக்கு இருந்த நெருக்கடி தீர்ந்தது.

ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட்…. ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு தப்பியது

சச்சின் பைலட்டும், ராகுல் காந்தியும் சந்தித்த சில மணி நேரங்களில் காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், அவர்கள் வெளிப்படையான, திறந்த மற்றம் உறுதியான கலந்துரையாடலை நடத்தினர். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் அரசாங்கத்தின் நலனுக்காக பணியாற்ற சச்சின் பைலட் உறுதி பூண்டுள்ளார். மேலும் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எழுப்பிய புகார்களுக்கு தீர்வு காண 3 பேர் கொண்ட கமிட்டியை அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார் என தெரிவித்தார். சச்சின் பைலட் நேற்று பிரியங்கா காந்தியையும் சந்தித்து பேசினார்.

ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட்…. ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு தப்பியது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நேற்று முன்தினம் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நகர மேம்பாட்டு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் சாந்தி தரிவால், கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் (சச்சின் பைலட் உள்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர்) திரும்பி வர அனுமதிக்கக்கூடாது என கூறியதாகவும், அதற்கு மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததாகவும் தகவல் வெளியானது. தற்போது கட்சி மேலிடம் சச்சின் பைலட்டை ராகுல் காந்தி மீண்டும் கட்சிக்குள் வரவழைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.