தகுதி நீக்கம் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்… இன்று விசாரணைக்கு வருகிறது

 

தகுதி நீக்கம் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்… இன்று விசாரணைக்கு வருகிறது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டங்களில் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கலந்து கொள்ளவில்லை. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல்தான் இதற்கு காரணம்.

தகுதி நீக்கம் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்… இன்று விசாரணைக்கு வருகிறது

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் மற்றும் மாநில கட்சி தலைவர் பதவிகளை காங்கிரஸ் பறித்தது. மேலும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கொறடா சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து 19 பேரிடமும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) பதில் அளிக்கும்படி சபாநாயகா் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். மேலும், தவறினால் எம்.எல்.ஏ. உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என அதில் எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது.

தகுதி நீக்கம் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்… இன்று விசாரணைக்கு வருகிறது

சபாநாயகர் தங்களுக்கு அனுப்பிய தகுதி நீக்கம் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ராஜஸ்தான் நீதிமன்றம் இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுக்கிறது. இன்று மதியம் 1 மணி அளவில் அந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து விட்டால், பெரும்பான்மைக்கான இலக்கு குறையும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அசோக் கெலாட் எளிதாக வெற்றி பெற்று விடும். அதேசமயம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதை தவிர்த்து, காங்கிரஸ் உறுப்பினர்களாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதி அளித்தால் அசோக் கெலாட் அரசு தோல்வி அடைய வாய்ப்புள்ளது. அதனால்தான் சச்சின் பைலட் குருப்பை தகுதி நீக்கம் செய்ய அசோக் கெலாட் அரசு முயற்சி செய்கிறது.