சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு : ஆனால் ஒரு கண்டிஷன்!

 

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு : ஆனால் ஒரு கண்டிஷன்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு : ஆனால் ஒரு கண்டிஷன்!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைக்கிறார். கோயில் வரும் 21 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு : ஆனால் ஒரு கண்டிஷன்!

கொரோனா தொற்று காரணமாக சபரிமலை கோயில் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் தினந்தோறும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 48மணிநேரத்திற்கு முன்பு எடுத்த ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். அப்படியில்லை என்றால் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பக்தர்களின் மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் நிலக்கல்லில் சோதனை செய்யப்படும். இந்த சான்றிதழ்கள் கொண்டு வராவிட்டால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.