மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நாளை சபரிமலை நடை திறப்பு

 

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நாளை சபரிமலை நடை திறப்பு

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தை ஒட்டி நாளை (நவம்பர் 15ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நாளை சபரிமலை நடை திறப்பு

தந்திரி கண்டராரு மகேஷ் மோகனரு தலைமையில் புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே.ஜெயராஜ் போத்தி பொறுப்பேற்க, பழைய மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பொறுப்புகளை ஒப்படைக்கிறார். நாளை மறுநாள் (நவம்பர் 16ம் தேதி) பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனத்திற்கு முன்பதிவு செய்த 10 மற்றும் 60 வயதிற்கு இடைப்பட்ட வயதுடைய பக்தர்கள், அவருடன் துணைக்கு வருவோர், வாகன ஓட்டுனர், விரதமிருந்து வருவோர் என அனைவருக்கும் 24 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா ”நெக்கட்டிவ்” சான்று, மலையேறுவதற்கான உடற்தகுதிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என கேரள சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பம்பை, மணிமலை ஆறுகளில் குளிக்கவும் சபரிமலை தவிர்த்து இதர சுற்றுவட்டார பகுதி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.