நவ.15 முதல் சபரிமலையில் நடைதிறப்பு! கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!!

 

நவ.15 முதல் சபரிமலையில் நடைதிறப்பு! கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!!

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தை ஒட்டி நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா விதிமுறைகளோடு தினமும் 1,000 பக்தர்களை அனுமதிக்கவும், விடுமுறை, சிறப்பு பூஜை காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கையை அதைவிட அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமின்றி, விரதமிருந்து வருவோருக்கும், சபரிமலை தொடர்பான பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா “நெக்கட்டிவ்” சான்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

நவ.15 முதல் சபரிமலையில் நடைதிறப்பு! கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!!

சபரிமலை தரிசனத்திற்கு வரும் வெளி மாநில பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு இங்கேயே தங்கி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டிருந்த ஐயப்பன் கோவில் மீண்டும் திறக்கப்படுவது பகதர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.