• December
    06
    Friday

Main Area

Main



சபரிமலையில் நாளை மகரஜோதி: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

sabarimala
sabarimala

கேரளா: சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளதால் கேரள மாநிலத்தில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

sabarimala

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர சங்கராந்தி தினமான   நாளை பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தெரியும், இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவியத் தொடங்கவுள்ளனர். இதனையடுத்து ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. இந்த பூஜையையொட்டி ஐயப்ப பக்தர்கள் சுமார் 18 லட்சம் பேர் நாளை சபரிமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

sabari

இது குறித்து கூறியுள்ள  காவல்துறை கூடுதல் இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம், '6000 அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தைச் சமாளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் போக்குவரத்தை சீர்ப்படுத்துவது, காணாமல் போகும் நபர்களை மீட்பது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பது, திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் அந்த அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.
அதுமட்டுமின்றி பத்தனம்திட்டா, கொல்லம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும்' தெரிவித்தார்.
 

2018 TopTamilNews. All rights reserved.