சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு : இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு!

 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு : இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைஇன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது . இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு, நிபா வைரஸ் ஆகியவை அதிகரித்து வரும் நிலையில் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு : இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு!

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்டம்பர் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. செப்டம்பர் 17 முதல் 21ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.தினசரி 10ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் இல்லாதவர்கள் முன்பதிவு செய்து இருந்தாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.