சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவிருக்கிறது. சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின் நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு நளை முதல் 21-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தினசரி 5,000 பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். தரிசனம் செய்யவிரும்புவோர் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தா்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியிருக்க வேண்டும் அப்படியில்லை எனில் கோயிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட ஆா்டிபிசிஆா் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.