சபரிமலை மகர விளக்கு பூஜை; ஆன்லைனில் முன்பதிவு

 

சபரிமலை மகர விளக்கு பூஜை; ஆன்லைனில் முன்பதிவு

மகர விளக்கு பூஜையில் பக்தர்கள் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதத்தில் பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தாலும், பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அங்கு வரும் 16ம் தேதி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கவிருப்பதால், பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசனை மேற்கொண்ட தேவசம்போர்டு , 5000 பக்தர்களை பூஜைக்கு அனுமதிக்கலாம் என தெரிவித்திருந்தது.

சபரிமலை மகர விளக்கு பூஜை; ஆன்லைனில் முன்பதிவு

இந்த நிலையில், மகர விளக்கு பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. பூஜையில் 10 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பூஜை காலங்களில் தினமும் 1,000 பக்தர்களையும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 5,000 பக்தர்களையும் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சபரிமலை மகர விளக்கு பூஜை; ஆன்லைனில் முன்பதிவு

மேலும் வனப்பாதையில் பக்தர்கள் செல்லத் தடை விதிப்பதுடன் உடல் ஆரோக்கிய பரிசோதனை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.