“அய்யப்பன் நகைகளையே அடகு வச்சிட்டிங்களே” -சம்பளம் தர பணமில்லையாம் .

 

“அய்யப்பன் நகைகளையே  அடகு  வச்சிட்டிங்களே” -சம்பளம் தர பணமில்லையாம் .

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் வருகை தடைபட்டதால் வருமானம் குறைந்து போய் அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு சம்பள தர முடியவில்லை .

“அய்யப்பன் நகைகளையே  அடகு  வச்சிட்டிங்களே” -சம்பளம் தர பணமில்லையாம் .


கேரளாவில் உள்ள சபரிமலை கோவில் உள்பட பல கோவில்கள் கடந்த ஐந்து மாதமாக மூடப்பட்டுளளதால் கோவில்களுக்கு வருமானமின்றி போனது .இதனால் அங்குள்ள கோவில்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் மாத சம்பளத்திற்கு மட்டுமே 50 கோடி ரூபாய் தேவைப்படுகிறது .அதற்கு பிறகு கோவில் நிர்வாக செலவு ,பராமரிப்பு செலவு என்று அதறகு மேலும் பல கோடிகள் தேவை .இந்த செலவுகளை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் காணிக்கையை கொண்டு சமாளிக்கப்பட்டு வந்தது .ஆனால் கடந்த ஐந்து மாதமாக வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் வருகை தடைப்பட்டதால் சம்பளம் தரமுடியாமல் நிர்வாகம் திணடாடியது .இதனால் கோவில்களுக்கு சொந்தமான 1000 கிலோ தங்க நகைகளை ரிசர்வ் வங்கியில் அடமானமோ அல்லது டெபாசிட்டோ செய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு தற்போதைக்கு சமாளிக்க கோவில் தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது .
மேலும் இந்த நகைகளெல்லாம் பக்தர்கள் கோவில்களுக்கு காணிக்கையாக வழங்கியதென்றும் இதற்கு முன்பு திருப்பதி கோயில் மற்றும் சாய் பாபா கோவிலிலும் இப்படி நடந்துள்ளதாகவும் கோவில் தேவசம் போர்டின் தலைவர் வாசு தெரிவித்தார் .

“அய்யப்பன் நகைகளையே  அடகு  வச்சிட்டிங்களே” -சம்பளம் தர பணமில்லையாம் .