`சபரீசன் – பிரசாந்த் கிஷோர் லடாய்!’- என்ன காரணம்?… ஓர் அலசல்!

 

`சபரீசன் – பிரசாந்த் கிஷோர் லடாய்!’- என்ன காரணம்?… ஓர் அலசல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக வேலை செய்து வரும் பிரசாந்த் கிஷோருக்கும், சபரீசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது திமுக வட்டாரம்.

பிரசாந்த் கிஷோர் … இந்த பெயரை அரசியல் தலைவர்கள் உச்சரிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அரசியல் கட்சிகளுக்கு டானிக் கொடுத்து அந்த கட்சியையே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வைத்து விடுகிறார். பிரதமர் மோடி முதல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர்தான் இந்த பிரசாந்த் கிஷோர்.

பீகார் மாநிலம்தான் பிரசாந்த் கிஷோரின் பூர்வீகம். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் ஆரம்பத்தில் பணியாற்றி வந்தார். மோடி, ராகுல் என அனைவரிடமும் நெருக்கத்தை காட்டிய பிரசாந்த் கிஷோர், 2014-ம் ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா முழுவதும் உற்றுநோக்கிய நபராக மாறியதோடு, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.கவுக்குப் பணியாற்றப் போவதை அந்தக் கட்சி தலைமை அறிவித்ததும், அடுத்த ரியாக்ஷஷன் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவில் வெளிப்பட்டது. `தி.மு.க வின் தலைமைக்கு அறிவு முலாம் பூச பீகாரிலிருந்து இரவல் மூளையை இறக்குமதி செய்திருக்கும் ஐ.பேக் நிறுவனம்” என்று விமர்சனம் செய்துள்ளது.

`சபரீசன் – பிரசாந்த் கிஷோர் லடாய்!’- என்ன காரணம்?… ஓர் அலசல்!

இந்த பீகார் இறக்குமதி மூளைதான் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.கவுக்குப் பணியாற்ற பேச்சுவார்த்தையும் நடந்தது. ஐபேக் நிறுவனம் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வுக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் சர்வே செய்தது. ஆனால் அ.தி.மு.க வின் அணுகுமுறையில் ஏற்பட்ட குழப்பத்தினால் கட்சிகள் அணிமாறுவது போல அணிமாறியது ஐ.பேக் நிறுவனம். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குச் சில காலம் வேலையும் செய்தது. ஏன்? கமல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் பலமுறை ஆலோசனையும் நடத்தினார் பிரசாந்த் கிஷோர். அப்போது தி.மு.கவுக்கு ஓ.எம்.ஜி என்கிற குழுமம் பணியாற்றி வந்தது. அந்தக் குழுவின் தலைவராக சுனில் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், கடந்த நவம்பர் மாதம் திடீரென சுனில் தனது பதவியை ராஜினாமா செய்ய, அதற்குப் பிறகுதான் பிரசாந்த் கிஷோர் தி.மு.கவுக்குப் பணியாற்றப் போகும் விவரம் வெளியே தெரிந்தது. இப்போது அதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

`சபரீசன் – பிரசாந்த் கிஷோர் லடாய்!’- என்ன காரணம்?… ஓர் அலசல்!

இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வே நடத்தியது ஐ பேக் நிறுவனம். எங்களுக்கு தெரியாமலேயே இந்த சர்வேயை நடத்தியதாக ஸ்டாலினிடம் நேரிடையாகவே குமுறினர் திமுக மாவட்ட செயலாளர்கள். அப்போது ஸ்டாலின், அந்த டீம் உடன் ஒத்துழைத்துப் போடுங்கள் என்று கூறிவிட்டார். இந்த நிலையில், கொரோனா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்களுக்கு ரேஷன் கடை மூலம் இரண்டு 1000 ரூபாய் கொடுத்து விட்டதோடு, தனது கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கிக் கொண்டது தமிழக அரசு. ஊரடங்கால் பலர் வேலைகளை இழந்தோடு, குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்தனர்.

`சபரீசன் – பிரசாந்த் கிஷோர் லடாய்!’- என்ன காரணம்?… ஓர் அலசல்!

இந்த நிலையில், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்திய ஸ்டாலின், இதில் பேசும் மக்களின் குறைகளை உடனடியாக நிர்வத்தி செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்த பணியில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் களத்தில் இறங்கி மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வந்தனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா காலத்தில் நேரிடையாகவே களத்தில் இறங்கிய மக்களுக்கு உதவிகளை செய்து வந்தார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அன்பழகன் உயிரிழந்தார். இதையடுத்து, நிவாரணப் பணிகளில் கவனமாக செயல்படுங்கள் என்று திமுகவினருக்கு அறிவுரை வழங்கினார்.

`சபரீசன் – பிரசாந்த் கிஷோர் லடாய்!’- என்ன காரணம்?… ஓர் அலசல்!

இந்த நிலையில், ஜெ.அன்பழகன் இறப்புக்கு பின்னர் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை நிறுத்தி விட்டது திமுக. இதற்காக சென்னை அண்ணா நகரில் இயங்கி வந்த ஐ பேக் அலுவலகமும் மூடப்பட்டுவிட்டது. இந்த நிலையில், கொரோனா நெருக்கடி காலமாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தேர்தல் யுக்திகளை வகுப்பதில் பிரசாந்த் கிஷோர் சீரியசாகத்தான் இருக்கிறார். இந்த விவகாரத்தில் பிரசாந்த் கிஷோருக்கும், சபரீசனுக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்திருப்பதாக திமுக வட்டாரங்கள். இந்த முறை சீனியர்கள், அதாவது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கத் தேவையில்லை என்கிற முடிவை பிரசாந்த் கிஷோர் எடுத்துள்ளாராம். ஆனால், சபரீசனோ, மூத்த நிர்வாகிகளின் அனுபவங்களையும் அவர்களின் தேர்தல் யுக்திகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களை முழுமையாக புறக்கணிக்கத் தேவையில்லை என கூறிவருகிறாராம். சபரீசனுக்கு நெருக்கமான சீனியர்கள் பலர் பிரசாந்த் கிஷோர் பட்டியலில் இருப்பதால் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.