சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினை பாராட்டிய சபா நாயகர்!

 

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினை பாராட்டிய சபா நாயகர்!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று. கடந்த 22ம் தேதி துணை முதல் ஓபிஎஸ், இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அதன் மீதான விவாதங்கள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது பேச வாய்ப்பு தராததால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சியினர் இல்லாமலேயே பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்து விட்டது.

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினை பாராட்டிய சபா நாயகர்!

அதிமுக அரசின் கடைசி கூட்டத்தொடர் இது. அதாவது, வரும் ஏப்ரல் 6ம் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, பதவியேற்கும் கட்சியுடனும் எதிர்கட்சியுடனும் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். அதனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது கடைசி உரையாற்றினார். தனது 4 ஆண்டு ஆட்சிக் காலத்துக்கு உறுதுணையாக இருந்த துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் அமைச்சர்களுக்கும் உருக்கத்துடன் நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினை பாராட்டிய சபா நாயகர்!

இதைத் தொடர்ந்து அவையில் பேசிய சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என அவரை புகழ்ந்து பேசினார். அதே போல, தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். இன்றோடு பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.