தலிபான்களுக்கு அழைப்பு… எதிர்த்த இந்தியா – சார்க் உச்சி மாநாடு கேன்சல்!

 

தலிபான்களுக்கு அழைப்பு… எதிர்த்த இந்தியா – சார்க் உச்சி மாநாடு கேன்சல்!

1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது சார்க் அமைப்பு. தெற்காசியாவைச் சேர்ந்த நாடுகளுக்கிடையேயான பிராந்திய கூட்டமைப்பின் சுருக்கமே சார்க் South Asian Association for Regional Cooperation, SAARC) என்றழைக்கப்படுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. 1985ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தவிர்த்த மற்ற நாடுகள் இருந்தன. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 14ஆவது உச்சி மாநாட்டில்தான் ஆப்கானிஸ்தான் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.

தலிபான்களுக்கு அழைப்பு… எதிர்த்த இந்தியா – சார்க் உச்சி மாநாடு கேன்சல்!

ஆண்டுதோறும் நடைபெறும் ஐநா பொதுச்சபை அமர்வின்போது சார்க் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளும் சார்க் உச்சி மாநாடு கூட்டமும் நடைபெறும். இம்மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடுவார்கள். அதன்படி இந்தாண்டுக்கான மாநாடு வரும் 25ஆம் தேதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தலிபான்களுக்கு அழைப்பு… எதிர்த்த இந்தியா – சார்க் உச்சி மாநாடு கேன்சல்!

இந்த உச்சிமாநாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு சார்பாக தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என்ற பாகிஸ்தான் ஒரு கோரிக்கையை முன்மொழிந்தது. பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கைக்கு இந்தியா காட்டமான எதிர்ப்பை தெரிவித்தது. இந்தியாவுடன் சேர்ந்த மற்ற உறுப்பினர் நாடுகளும் தலிபான்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். பாகிஸ்தான், தலிபான் vs 6 உறுப்புநாடுகள் என நிலைமை மாறியதால், சார்க் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.