அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் விஜய் உடையது அல்ல; என்னுடையது- இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர்

 

அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் விஜய் உடையது அல்ல; என்னுடையது- இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர்

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் சந்தித்தார். அப்போது அரசியலில் நுழைவதற்கான ஆலோசனை நடைபெற்றதாக ஊடகங்கள் கிளப்பிவிட்டன. தொடர்ந்து அரசியலுக்கு வரும்படி, நடிகர் விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டினர். ஆனால் தேவையற்ற போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.

அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் விஜய் உடையது அல்ல; என்னுடையது- இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர்

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறியுள்ளது. கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்தார். கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.ஏ சந்திரசேகர், “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சிதான், விஜயின் அரசியல் கட்சி அல்ல. விஜய்க்கும் அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என விளக்கமளித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி என்றும் எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.