மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்- எஸ்.ஏ சந்திர சேகர்

 

மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்- எஸ்.ஏ சந்திர சேகர்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது பாஜக. மாற்று கட்சியினரையும், பிரபலங்களை குறி வைத்து ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன். தமிழக பாஜக தலைவராக முருகன் பதவியேற்ற பிறகு நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர், நடிகைகள் நமீதா, காயத்திரி ரகுராம், குட்டி பத்மினி, ஜெயலட்சுமி, மதுவந்தி என பலரும் பாஜகவில் முட்டி மோதி சேர்ந்தனர்.இவர்கள் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்- எஸ்.ஏ சந்திர சேகர்

இதை கண்ட நடிகை குஷ்பு உடனடியாக டெல்லி வரை சென்று பாஜகவில் தன்னை மாஸாக இணைத்து கொண்டார். இந்நிலையில் இவர்களை தொடர்ந்து நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கமளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், “பாஜகவில் இணையப்போகிறோம் என்ற கருத்துக்கே இடமில்லை. தனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது. அதுதான் விஜய் மக்கள் இயக்கம். தேவைப்போடும்போது அதனை அரசியல் கட்சியாக மாற்றுவோம் மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார். விரும்பும் கதாபாத்திரத்தை நடிக்க நடிகருக்கு சுதந்திரம் உள்ளது” என தெரிவித்தார்.