“எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார்; வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்” : முதல்வர் பழனிசாமி பதிலடி!

“எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார்; வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்” : முதல்வர்  பழனிசாமி பதிலடி!

மும்மொழிக்கொள்கைக்கு கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படும் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் முதல்வர் எட்பாடி மும்மொழிக்கொள்கைக்கு பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

“எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார்; வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்” : முதல்வர்  பழனிசாமி பதிலடி!

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு மாணவர்கள் பேசக்கூடாது என நினைக்கிறீர்கள்? தி.க., தி.மு.க போல் ஏன் அதிமுக செயல்படுகிறது? முதலில் உங்கள் கட்சியில் உள்ள கொடியில் அண்ணா படத்தை தூக்குங்கள், கட்சிப் பெயரிலும் அண்ணா என்ற வார்த்தையை தூக்கிவிட்டு அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று வையுங்கள். அப்போது தான் நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கும்” என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார்; வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்” : முதல்வர்  பழனிசாமி பதிலடி!

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ” எஸ்.வி. சேகரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார். எங்களுக்கு இந்தி தெரியும் என்பது அவருக்கு எப்படி தெரியும்? அவர் எந்த கட்சி?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.