’கொரோனா சோதனைகளில் புதிய உச்சம்’ தமிழக அரசைப் பாராட்டும் ராமதாஸ்

 

’கொரோனா சோதனைகளில் புதிய உச்சம்’ தமிழக அரசைப் பாராட்டும் ராமதாஸ்

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரொனா பேரிடரின் பாதிப்புகள் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.  நாடு முழுக்க லாக்டெளன் அறிக்கப்பட்டதால் எந்த நிறுவனங்களும் இயங்க வில்லை. பள்ளி, கல்லூரிகள்கூட நடக்க வில்லை. மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைய வில்லை. மாறாக அதிகரித்தது.

’கொரோனா சோதனைகளில் புதிய உச்சம்’ தமிழக அரசைப் பாராட்டும் ராமதாஸ்

தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று 6472 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் தமிழக அரசுவின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் பாராட்டி ட்விட் பதிந்திருக்கிறார்.

அதில், ’தமிழ்நாட்டில் இன்று 113 ஆய்வகங்கள் மூலம் 62,112 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது புதிய உச்சம் ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகமாக சோதனைகள் செய்யப்படவில்லை. பாராட்டுகள் ’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் கொரோனா பாதிப்பு கிராமங்கள் வரை அதிகரிக்க என்ன காரணம் என்பதையும் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

’கொரோனா சோதனைகளில் புதிய உச்சம்’ தமிழக அரசைப் பாராட்டும் ராமதாஸ்

அதில், ’தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6472 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக அதிக அளவில் சோதனை செய்து நோய்ப்பரவலையும் தடுக்கிறது. ஆனாலும் கொரோனா பரவ காரணம் என்ன?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து குறுக்கு வழிகளில் கிராமங்களுக்கு சென்றவர்கள் தங்களை சோதனை செய்து கொள்ளாததும், தனிமைப் படுத்திக் கொள்ளாததும் தான் கொரோனா அதிகம் பரவ காரணம் ஆகும்.

மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது. கிராமங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும். புதிதாக ஊருக்கு வருபவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.