கொரோனா அச்சம்… தென் கொரியாவில் பணத்தை வாஷிங் மெஷினில் போட்டு கழுவியருக்கு நேர்ந்த கதி!

 

கொரோனா அச்சம்… தென் கொரியாவில் பணத்தை வாஷிங் மெஷினில் போட்டு கழுவியருக்கு நேர்ந்த கதி!

தென் கொரியாவில் கொரோனா அச்சம் காரணமாக பணத்தை ஒருவர் வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் செய்ய முயன்று சிக்கலில் மாட்டிய விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

கொரோனா அச்சம்… தென் கொரியாவில் பணத்தை வாஷிங் மெஷினில் போட்டு கழுவியருக்கு நேர்ந்த கதி!தென்கொரியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாத் தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தென்கொரியா தலைநகர் சியோல் அருகே உள்ள ஆன்சான் நகரில் வசித்து வந்த ஒருவர், தன்னிடமிருந்து 50,000 வோன் நோட்டு கட்டை (ஒரு 50 ஆயிரம் வோன் என்பது 42 அமெரிக்க டாலருக்கு சமம்) வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் செய்துள்ளார். நன்கு ஹீட்டர் போட்டு அதில் உள்ள கிருமிகளை அழிக்க முயற்சி செய்துள்ளார்.

கொரோனா அச்சம்… தென் கொரியாவில் பணத்தை வாஷிங் மெஷினில் போட்டு கழுவியருக்கு நேர்ந்த கதி!
ஹீட்டர் வெப்பம் காரணமாக சில வோன் நோட்டுக்கள் எரிந்தும் விட்டது. இதனால் பதறிய அவர் வாஷிங் மெஷினை நிறுத்தி பணத்தை வெளியே எடுத்துள்ளார். இதில் நோட்டுகள் பலத்த சேதம் அடைந்தது.
இதனால் வங்கியை அணுகி நடந்ததை அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டு, கிழந்த, எரிந்த நிலையில் இருந்த வோன் நோட்டுக்களை மட்டும் வங்கி அதிகாரிகள் மாற்றிக் கொடுத்துள்ளனர். 23 பில்லியன் வோன் (19,320 அமெரிக்க டாலர்) அளவுக்கு அவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதாக தென்கொரிய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.