ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதனை!

 

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதனை!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 19 லட்சத்து 95 ஆயிரத்து 218 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 749 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 631 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 96,64,838 பேர்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதனை!

கொரோனா தடுப்பூசி மட்டுமே இந்த ஆபத்திலிருந்து விடுவிக்கும் என்ற நிலையில் உலகமே உள்ளது. பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும், ரஷ்யா மட்டுமே முழுமையான கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்துவிட்டதாக அறிவித்தது. ஆகஸ்ட் 12-ம் தேதி அதைப் பதிவும் செய்தது.

ஸ்புட்னிக் V என்று பெயரிட்ட அந்தத் தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மையை உலகிற்கு தெரிவிக்க, தன் மகளுக்கு அம்மருந்தைச் செலுத்த வைத்திருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு அம்மருந்தை விற்பனை செய்யும் திட்டத்தில் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவும் ஸ்புட்னிக் V மருந்தை வாங்கும் முயற்சியில் உள்ளது.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதனை!

இந்நிலையில் ரஷ்யா தரப்பில், ஸ்புட்னிக் V மருந்தை இந்தியாவில் தன்னார்வலர்களுக்குப் பரிசோதனை செய்ய திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக 100 தன்னார்வலர்களுக்குச் செலுத்தியும், மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு 1400 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.