kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


தந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்!

Khachaturyan sisters
Khachaturyan sisters
Loading...

மரியா, ஏஞ்செலினா, கிறிஸ்டினா என்ற 17, 18, 19 வயதுடைய மூன்று சகோதரிகள் ரஷ்ய சிறையில் இருக்கிறார்கள், தந்தையைக் கொன்ற வழக்கு அவர்கள்மீது நடந்துவருகிறது. கச்சத்தூரியன் சகோதரிகள் என ரஷ்ய பத்ரிகைகள் மட்டுமல்ல, சர்வதேச கவனமும் இந்த சகோதரிகள் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பெற்ற தந்தையைக் கொன்ற இந்த சகோதரிகளை விடுதலை செய்யவேண்டும் என மூன்று லட்சம் ரஷ்யர்கள் கையெழுத்து இயக்கம்மூலம் வலியுறுத்தி இருக்கிறார்கள். டீன் ஏஜ் தாண்டாத, அதுவும் பெற்ற தந்தையைக் கொன்றவர்களுக்கு ஏன் விடுதலை அளிக்கவேண்டும் என பொதுமக்களும், உலக மீடியாவும் கவனம் செலுத்த வேண்டும்? அவர்கள் என்ன அவ்வளவு நல்லவர்களா? இல்லை, அவர்களின் விடுதலைக்காக ரஷ்யர்கள் வேண்ட காரணம், அவர்களின் தந்தை அவ்வளவு கொடூரமானவன் என்பதால்.

Khachaturyans in court

மிகேல் கச்சத்தூரியன் என்ற அந்த கொடுங்கோலன், தன்னுடைய மனைவியை தினந்தோறும் அடித்து துன்புறுத்துபவன், அவன் கொடுமை தாங்காமல் மனைவி அவனைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மனைவி சென்றதும் மூன்று மகள்களை பெண்டாள நினைத்திருக்கிறான் காமுகன். ஒவ்வொரு நாளும் மகள்களை திட்டுவது, அடிப்பது, முகத்தில் மிளகுப்பொடி வீசுவது என கடந்த மூன்று வருடங்களாக அழிச்சாட்டியங்கள் எல்லை மீறவே, பொறுக்கமுடியாத சகோதரிகள் மூவரும் சேர்ந்து முப்பது முறை கத்தியால் குத்தி கொன்றிருக்கிறார்கள். கொன்றவுடனேயே காவல்துறைக்கு முறையாக தகவல் தெரிவித்துவிட்டு கைதாகியிருக்கிறார்கள். கடந்த ஒருவருடமாக நடந்துவரும் இந்த வழக்கில், சகோதரிகள் மூவரின் செயலும் சரியே என்றும் அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்றும் கோரி கையெழுத்து இயக்கம் கனஜோராக நடக்கிறது. வழக்கில் இருந்து விடுதலை செய்கிறார்களோ இல்லையோ, என்னிடம் கேட்டால் நான் கையெழுத்து போடுவேன். நீங்கள்?

2018 TopTamilNews. All rights reserved.