• March
    31
    Tuesday

Main Area

Main



இதய வடிவில் நிறுத்தி வைக்கப்பட்ட டேங்கர்கள்...காதலியிடம் ப்ரபோஸ் செய்த ரஷிய ராணுவ வீரர் – வீடியோ உள்ளே!

love proposal
love proposal

மாஸ்கோ: ரஷிய ராணுவ வீரர் ஒருவர் டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி தனது காதலியிடம் காதலை சொன்ன வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் தங்கள் துணையிடம் வித்தியாசமாக காதலை சொல்லி ஓகே வாங்குபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி பலரது கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், இந்தாண்டு காதலர் தினத்தில் ரஷிய ராணுவ வீரர் தனது காதலியிடம் காதலை சொன்ன விதம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ரஷியாவின் ராணுவ படைப் பிரிவில் வீரராக பணி புரியும் டெனிஸ் கென்ஸ்செவ் (23) என்பவர் தனது காதலி அலெஸ்சாண்டிரியாவிடம் (19) காதலை கூற முடிவு செய்தார். இதற்காக அலெஸ்சாண்டிரியாவை ராணுவ தளத்திற்கு டெனிஸ் அழைத்து சென்றார். ராணுவ தளத்திற்கு வந்த பின்பு காதலியின் கண்களை மூடிய அவர் ராணுவ தளத்தின் மையப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு சக வீரர்களின் உதவியுடன் மொத்தம் 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி டெனிஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, காதலியின் கண்களை அவர் திறந்தார்.

தன்னை சுற்றிலும் ராணுவ டேங்கர்கள் இதய வடிவில் நிற்பதையும், காதலன் டெனிஸ் கையில் பூங்கொத்துடன் லவ் ப்ரபோஸ் செய்ததையும் கண்டு அலெஸ்சாண்டிரியா இன்ப அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் டெனிஸ் காதலை அவர் அன்போடு ஏற்றுக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.