ரஷ்ய கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம் – காரணம் இதுதான்

 

ரஷ்ய கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம் – காரணம் இதுதான்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 53 லட்சத்து   48 ஆயிரத்து 176 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 29 லட்சத்து 96 ஆயிரத்து 335 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 86 ஆயிரத்து 369 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 11,65,445 பேர்.

ரஷ்ய கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம் – காரணம் இதுதான்

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கி பல நாடுகளும் சென்றுகொண்டிருக்கின்றன. உலகின் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியைக் கண்டறிந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஸ்புட்னிக் v எனும் பெயரிட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது.

ஸ்புட்னிக் v தடுப்பு மருந்தை பல நாடுகளுக்கு விநியோகம் செய்ய ரஷ்ய அரசு ஒப்பந்தம் செய்துவருகிறது. அவற்றில் இந்தியாவும் ஒன்று. ஸ்புட்னிக் v மருந்து பல கட்டமாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

ரஷ்ய கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம் – காரணம் இதுதான்

முதல் கட்ட பரிசோதனைக்கு செலுத்தபட்டவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் செலுத்த வேண்டும். அதற்கு போதுமான அளவு மருந்து இல்லாத காரணத்தால் மட்டுமே இச்சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டு, விரைவில் உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி பரவலாகக் கிடைக்கும் என நம்பப்படுகிறது.