ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

 

ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 25ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

வேட்புமனு தாக்கல் தொடங்கி முதல் 6 நாட்களில் 64,299 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.காஞ்சிபுரம், விழுப்புரம் ,நெல்லை, கள்ளக்குறிச்சி ,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் அலுவலகங்களில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கார்த்திக் என்பவர் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல நெல்லை மாவட்டம் கானார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பொறியியல் பட்டதாரியான அருள் பிரியா தனது 16 நாள் குழந்தையை தூக்கி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.