ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

 

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல், ஊரக வளர்ச்சி துறையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டப்பணிகளை கால அவகாசம் இன்றி முடிக்க கட்டாயப்படுத்துவது. ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும், கடுமையான நெருக்கடிகளும், தொடர்ந்து காணொலி ஆய்வு என்ற பெயரில் அழுத்தம் கொடுப்பதை தடுக்க கோரியும், அரசின் பழி வாங்கும் நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் நான்கு ஊழியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்ததை ரத்து செய்ய வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்த பங்கேற்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட 17–பி குற்ற நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தை உடன் வழங்க வேண்டும்.
கணினி உதவியாளர்கள், முழு நேர சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு கால முறை ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி , ஊரக வளர்ச்சி துறை அனைத்து

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

அலுவலர்கள், அதிகாரிகள் வேலையைப் புறக்கணித்து நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அலுவலர்கள் அதிகாரிகள் வேலை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்று இரண்டாவது நாளாக இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அலுவலர்கள் அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 734 பேர் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் இரண்டாவது நாளாக பங்கேற்று வருகின்றனர் .

ரமேஷ் கந்தசாமி