’30 நாட்களில் 40,624 கி.மீ தூரம் ஓட்டம்’ CRPF வீரர்களின் ஆரோக்கிய விழிப்புணர்வு!

’30 நாட்களில் 40,624 கி.மீ தூரம் ஓட்டம்’ CRPF வீரர்களின் ஆரோக்கிய விழிப்புணர்வு!

ஆவடியில் CRPF வீரர்கள் 30 நாட்களில் சுமார் 40,624 கி.மீ தூரம் ஓடி ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

’30 நாட்களில் 40,624 கி.மீ தூரம் ஓட்டம்’ CRPF வீரர்களின் ஆரோக்கிய விழிப்புணர்வு!

‘ஃபிட் இந்தியா ரன்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஆரோக்கிய விழிப்புணர்வு திட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள சி.ஆர்.பி.எப்‌ வீரர்கள் ஒரு கோடி கிலோ மீட்டர் தூரம் வரை மாரத்தான் ஓட வேண்டும் என இலக்கு அமைக்கப்பட்டது. இந்த மாரத்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தொடங்கிய நிலையில், நாளையுடன் நிறைவடைகிறது. இந்த மாரத்தானில் CRPF வீரர்கள் மட்டும் அல்லாது அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

’30 நாட்களில் 40,624 கி.மீ தூரம் ஓட்டம்’ CRPF வீரர்களின் ஆரோக்கிய விழிப்புணர்வு!

இந்த நிலையில், ஆவடியில் பயிற்சி பெரும் CRPF வீரர்கள் கடந்த 30 நாட்களில் சுமார் 40 ஆயிரத்து 624 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓடியிருப்பதாக தெரிவித்துள்ளனர். வீரர்கள் மட்டும் அல்லாது அவர்களது குடும்பத்தில் இருக்கும் ஆண், பெண் குழந்தைகள் என எல்லாரும் ஃபிட் இந்தியா ரன்- இல் பங்கேற்று இவ்வளவு கி.மீ தூரம் ஓடி விழுப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.