அஸ்ஸாமுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டதாக பரவும் வதந்தி! – பூடான் அரசு மறுப்பு

 

அஸ்ஸாமுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டதாக பரவும் வதந்தி! – பூடான் அரசு மறுப்பு

அஸ்ஸாம் மாநில விவசாய பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரை பூடான் அரசு நிறுத்திவிட்டதாக பரவும் தகவல் தவறானது என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அஸ்ஸாமுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டதாக பரவும் வதந்தி! – பூடான் அரசு மறுப்புபூடான் எல்லையில் தடுப்பணைக் கட்டப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. அந்த தண்ணீர் மூலம் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த தடுப்பணையில் தண்ணீர் திறந்துவிடுவதை பூடான் அரசு நிறுத்திவிட்டதாக செய்தி வெளியானது. ஆனால் இதை பூடான் அரசு மறுத்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 24ம் தேதி முதல் பூடான் தொடர்பான பல்வேறு தவறான தகவல்கள் இந்திய சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அஸ்ஸாமுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டதாக பரவும் வதந்தி! – பூடான் அரசு மறுப்புகொரோனா காரணமாக இந்தியா மற்றும் பூடான் எல்லை மூடப்பட்டது. இதனால், பூடான் எல்லையில் உள்ள தடுப்பு அணைகளுக்கு வந்து அஸ்ஸாம் விவசாயிகள் வந்து அணையை பரமரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியவில்லை என்ற பிரச்னை இருந்தது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதும் அஸ்ஸாம் விவசாயிகள் வந்து நீர்த்தேக்கத்தை, வாய்க்கால்களைப் பராமரிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அஸ்ஸாமுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

அஸ்ஸாமுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டதாக பரவும் வதந்தி! – பூடான் அரசு மறுப்புஅப்படி இருக்கும்போது அஸ்ஸாமுக்கு தண்ணீர் வழங்குவதை பூடான் நிறுத்திவிட்டது என்று கூறுவது முழுக்க முழுக்க எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு ஆகும். இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுக்கள் அஸ்ஸாம், பூடான் மக்கள் மத்தியில் நிலவும் நட்புறவை சீர் கெடுத்துவிடும்” என்று கூறியுள்ளது.